இடைத்தேர்தல்: ஓட்டுக்கு ரூ. 5,000 தர திமுக திட்டம்- வைகோ

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
திமுக அரசு பழிவாங்கும் எண்ணத்தோடு என் மீது இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சனைக்காக நிறைய போராட்டங்கள் நடத்தி வருகிறேன். ஆதரவாகவும் பேசி வருகிறேன். இந்த வழக்கில் நானும், கண்ணப்பனும் கைது செய்யப்பட்டோம். ஆனால் இப்போது என் பெயர் மட்டுமே குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
கோர்ட்டு மற்றும் ஜெயிலை பார்த்து பயந்து புலம்புவன் நான் அல்ல. அது உலகத்துக்கே நன்றாக தெரியும். இந்த வழக்கில் நானே ஆஜராகி வாதாடுவேன். உரிய முறையில் வழக்கை சந்திப்பேன்.
கடந்த முறை இந்த வழக்குக்காக நான் நீதிமன்றத்தில் ஆஜரானபோது அளித்த பேட்டி குறித்து திமுக தலைவர் கருணாநிதி முரசொலியில், நான் 'சண்டித்தனம்' செய்வதாக எழுதியுள்ளார்.
அந்தப் பழக்கம் எனக்கு கிடையாது.ஈழத்தில் நடப்பது என்ன? என்று அன்று பேசிய பேச்சில் இப்போதும் நான் உறுதியாக இருக்கிறேன்.
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத் தேர்தலில் பணநாயகம் இல்லாமல் ஜனநாயகம் மட்டும் செயல்பட்டால் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்.
திருமங்கலத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுகவினர் எப்படி பணம் கொடுத்தார்களோ அதே போல நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களில் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் கொடுக்க திமுகவினர் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றார் வைகோ.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications