ராஞ்சி சிறையில் மதுகோடா-உ.பி.யிலும் கைவரிசை அம்பலம்

ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, ஏராளமான போலி நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார்.
தான் சேகரித்த பணத்தை பதுக்குவதற்காக போலியாக நிறுவனங்களை உருவாக்கி, இல்லாத நிறுவனங்களின் பேரில், அரசு ஒப்பந்தப் பணிகளைப் பெற்று பல நூறு கோடி ரூபாயை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
போலி நிறுவனங்களின் பெயரில் உத்தரப் பிரதேச அரசுப் பணிகளை அடுத்தடுத்து ஒப்பந்தத்தில் எடுத்துள்ளார் மதுகோடா. கடைந்தெடுத்த ஊழல்வாதிகளும், குற்றப்பின்னணி உள்ளவர்களும் அரசியல் நடத்திவரும் உ.பி போன்ற பெரிய மாநில விவகாரத்தில் மதுகோடா விளையாடியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம், ஜாலுவான் மாவட்டத்தில் பாலிடெக்னிக் கட்டுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதியில் கோடாவின் போலி நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. அடுத்த 10 நாட்களில், ரூ.300 கோடி மதிப்பிலான பல்கலைக் கழக கட்டுமானப் பணி, ரூ.40 கோடி மதிப்பிலான சாலைப் பணி ஆகியவற்றையும் அதே நிறுவனம் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் ரூ.190 கோடி மதிப்பிலான கல்லூரி கட்டுமானப் பணி ஒப்பந்தம் மீண்டும் அதே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அதிகாரிகள் மட்டத்தில் ஒத்துழைப்பு இல்லாமல் இவற்றை சாதிப்பது கடினம். எனவே அங்கும் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, நேற்று மனைவி கீதாவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய புறப்பட்ட நேரத்தில் கைது செய்யப்பட்ட மதுகோடாவை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் மதுகோடா அடைக்கப்பட்டுள்ளார்.
மதுகோடா ஊழலுக்கு உடந்தையாக இருந்த கமலேஷ்குமார் சிங்கையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மதுகோடா, தனது மெகா ஊழலுக்கு காரண கர்த்தாக்கள் என 5 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அடையாளம் காட்டியிருப்பதாக தெரிகிறது. அதில் மூன்று பேர் தற்போது பணியில் இருப்பவர்கள். சம்பந்தப்பட்ட அதிகார்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications