பீகாரில் மாதந்தோறும் 595 புதிய எய்ட்ஸ் நோயாளிகள்
Subscribe to Oneindia Tamil

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இயங்கும் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையங்களில் பதிவான தகவல்களில் இருந்து இந்த புள்ளிவிவரம் பெறப்பட்டது.
பீகாரி்ல் நடப்பாண்டில் மட்டும் இதுவரை 6550 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24,835.
பதிவேடுகளில் உள்ள எண்ணிக்கை தான் இது. ஆனால் பீகாரில் எய்ட்ஸ் பாதித்தோர் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என கணிக்கப்படுகிறது.
எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பீகாரில் மட்டும் மாதத்திற்கு ரூ.22 கோடி செலவிடப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் செலவிட்டும், கட்டுக்கடங்காமல் நோய் அதிகரிப்பது இங்குள்ள தன்னார்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications