மன்மோகன் சிங் மகளுக்கு சமூக அறிவியலுக்கான இன்போசிஸ் பரிசு

சமூக அறிவியல் துறையில் சிறப்பாக செயல்படுவோரை ஊக்குவிப்பதற்காக புதிய பரிசு ஒன்றை உருவாக்கியுள்ளது இன்போசிஸ் நிறுவனம். முதல் விருதினை உபிந்தர் சிங்கும், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த அபிஜித் வினாயக் பானர்ஜியும் இணைந்து பெறுகிறார்கள்.
50 வயதாகும் உபிந்தர் சிங், டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், உபிந்தர் சிங், பிரதமரின் மகள்தான். இருப்பினும் அவருடைய தகுதி மற்றும் திறமைகளை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் பரிசுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எனவேதான் பிரதமரின் மகள் என்று அவரை நாங்கள் அறிமுகப்படுத்தவில்லை என்றார்.
நோபல் பரிசு வென்ற அமார்த்யா சென்னை தலைவராகக் கொண்ட இன்போசிஸ் நிறுவனத்தின் இன்போசிஸ் அறிவியல் கழகம் இந்தப் பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்துள்ளது.
இந்தப் பரிசு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையைக் கொண்டது. இதை உபிந்தரும், பானர்ஜியும் தலா ரூ. 25 லட்சமாக பகிர்ந்து கொள்வார்கள்.
சிறந்த வரலாற்றியலாளராக உபிந்தரும், வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கையில் ஆற்றிய சிறப்பான பணிக்காக பானர்ஜியும் இந்தப் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 4ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் உபிந்தருக்கும், பானர்ஜிக்கும் பரிசினையும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தையும் வழங்குவார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications