நெல்லை மாவட்டத்தில் 4,000 பேருக்கு எய்ட்ஸ்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 4 ஆயிரம் பேர் எச்ஐவி - எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக எய்ட்ஸ் தின கருத்தரங்கில் தெரிவி்க்கப்பட்டது.
உலக எய்ட்ஸ் தினம் ஓவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு நெல்லையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நடந்தது.
நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். அங்கிருந்து நெல்லை சந்திப்பு தட்கோ சமுதாய நலகூடத்தை பேரணி வந்தடைந்தது.
கருத்தரங்கில் அதிகாரிகள் பேசுகையில்,
தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 753 நம்பிக்கை மையங்கள் எய்ட்ஸ் நோயை தடுக்கும் பணியில் செயல்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டத்தில் 37 நம்பிக்கை மையங்கள் மூலம் இதுவரை 13 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் ஏஆர்டி மையம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனையில் பதிவு செய்கின்றனர். இதில் 99 சதவீதம் கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி பரிசோதனை செய்யப்படுகிறது.
2005ம் ஆண்டில் இருந்து இதுவரை 250 எச்ஐவி தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் எச்ஐவி பரிசோதனை செய்வதன் மூலம் தாயிடம் இருந்து குழந்தைக்கு எச்ஐவி பரவுவதை தடுக்க முடியும் என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications