அவசரகால பட்டனை அழுத்தி பயணிகளுடன் உயிருடன் விளையாடிய ஜெட் ஏர்வேஸ் விமானம்

கடந்த அக்டோபர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் டெல்லியிலிருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்தது. கிட்டத்தட்ட தரையிலிருந்து 3700 அடியில் விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது விமானியின் பின்புறம் அமர்ந்திருந்த சோதனை பைலட், அவசர கால பட்டனை அழுத்தினார்.
அவசர காலத்தில் விமானி எப்படி செயல்படுகிறார் என்பதை அறிவதற்காக இவ்வாறு செய்தார் சோதனை பைலட்.
இப்படி பட்டனை அழுத்தியதால் விமானம் தரையிறங்க உதவி செய்யும் கருவிகள் இயங்கவில்லை. ரன்வே நிலவரத்தை அறிவிக்கும் எச்சரிக்கைக் கருவிகளும் செயல்படவில்லை.
அப்போது விமானம் வழக்கமான வேகத்தை விட அதிக வேகத்தில் வந்து கொண்டிருந்ததாம். மேலும் அந்தேரி, ஜரிமரி மலைப் பகுதிக்குப் பின்புறம் விமானம் பறந்து கொண்டிருந்தது.
இப்படிக் குழப்பமான நிலை ஏற்பட்டபோதிலும் அனுபவம் வாய்ந்த விமானியாக இருந்ததால், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் வி்மானம் பத்திரமாக தரையிறங்கியது.
இந்த சம்பவம் குறித்து தற்போது ஜெட் ஏர்வேஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
விமானம் பயணிகளுடன் பறக்கும்போது அவசர காலத்திற்குப் பயன்படும் சர்க்யூட் பிரேக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று விமானத் தயாரிப்பு நிறுவனங்களான போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகியவை கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள போதிலும் அதை மீறி இந்த சோதனை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விமானம் எந்தவிதப் பிரச்சினையையும் சந்திக்காமல் தரையிறங்கியபோதிலும், விதி மீறல் இருப்பதால் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
அதேபோல சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications