சென்னை அண்ணா சாலை-செனடாப் சாலை சந்திப்பில் மூப்பனாருக்கு சிலை

இதுகுறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,
சென்னை மாநகராட்சி மன்ற எதிர்க்கட்சித் தலைவர் சைதை பி.ரவி, மாநகராட்சி ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், சென்னை அண்ணா சாலை மற்றும் செனடாப் சாலை சந்திப்பில், செனடாப் சாலை நடுவில் உள்ள தீவில், மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனாரின் முழு உருவ வெண்கல சிலையை தனது செலவில் நிறுவிடவும், நிறுவிய பின் சிலையின் பராமரிப்பு முழுவதும் அவரே ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கான அரசின் அனுமதியையும் கோரியிருந்தார்.
இது தொடர்பாக அரசுக்கு, மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆகியோர், செனடாப் சாலை மற்றும் அண்ணா சாலை சந்திப்பில் உள்ள செனடாப் சாலையின் நடுவே உள்ள சாலை தீவை மேலும் விரிவுபடுத்தக் கூடாது. சிலையானது சாலை தீவின் உட்புறம் மட்டுமே நிறுவவேண்டும் என நிபந்தனை விதித்து தடையில்லா சான்றினை அளித்தனர்.
அதன்பிறகு, சென்னை மாவட்ட கலெக்டரும், சிலையை நிறுவுவது குறித்த முன்மொழிவுகளை பரிந்துரை செய்தார். இவற்றின் அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள, சிலைகள் நிறுவும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், சென்னை மாநகராட்சி மன்ற தீர்மான ஒப்புதலின்படியும் மற்றும் இதர துறையினரின் அனுமதியுடனும், செனடாப் சாலையில் மூப்பனாரின் முழு உருவ வெண்கல சிலையை நிறுவ, சைதை ரவிக்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications