கோர்ட் வளாகத்தில் பாமக பிரமுகருக்கு கத்திகுத்து
அம்பை: விபத்து வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்ட பா.ம.க பிரமுகரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பை பெரியகுளம் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம். இவர் பா.ம.க நகர செயலாளராக உள்ளார். இவரது உறவினர் மைதீன் பிச்சை. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்து தொடர்பாக நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இருவரும் அம்பை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இப்ராகிமை போலீசார் கைது செய்து நேற்று அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அப்போது அங்கு வந்த மைதீன் பிச்சையின் உறவினரும், முன்னாள் பா.ம.க மாவட்ட தலைவருமான முரளி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இப்ராகிமை குத்தி விட்டு தப்பியோடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த இப்ராகிமை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே இப்ராகி்மை கத்தியால் குத்தியவரை கைது செய்ய கோரி 100க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் அம்பை கோர்ட் முன்பு திரண்டனர்.
தகவல் அறிந்த டி.எஸ்.பி கோபாலன், பா.ம.க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தார். கத்தியால் குத்திய முரளி மற்றும் மைதீன் பிச்சையை போலீசார் தேடிவருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications