திரிகோணமலை, மட்டக்களப்பில் நில ஆக்கிரமிப்புக்கு தயாராகும் இலங்கை அரசு

போரினால் இங்கிருந்து இடம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் குடியேறுவதற்கு முன்பாகவே, அவசர கதியில் இந்த நடவடிக்கைகளை முடிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
'இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்' என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் இலங்கையின் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்,
'இலங்கையின் வட கிழக்கு பகுதிகளில் விவசாய உற்பத்தி மற்றும் தொழில் முதலீடுக்கு உகந்த ஏராளமான நிலங்கள் மிகுதியான அளவில் அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உணவுப் பொருள் உற்பத்தி செய்வதற்காகவும், நவீன விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், இதர தொழில் முதலீட்டுக்கும் இவை பயனுடையதாக இருக்கும். எனினும் விவசாய தொழில் முதலீட்டுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் இருந்து தீவிரவாதத்தை அப்புறப்படுத்தியதை அடுத்து, அந்த பகுதிகள் சுற்றுலாவுக்காகவும், சுற்றுலா சார்ந்த கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் இந்திய முதலீடுக்காகவும் தற்போது திறந்துவிடப்படுகிறது.
திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகறை, நிலவேலி, அருகம்பை போன்ற இடங்கள் முதலீட்டுக்கு உகந்த இடங்களாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வசதியான முறையில் அரசாங்க நடைமுறைகள் தளர்த்தப்பட்டு, ஒப்புதல் வழங்கும் பணிகள் துரித கதியில் முடித்துத் தரப்படும்' என்றார்.
இலங்கை அரசு வடகிழக்குப் பகுதியில் தொழில் வாய்ப்புகளை பெருக்குகிறோம் என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும், வளங்களை அபகரிக்கவும் திட்டமிடுவதாக தமிழர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
இலங்கை துணைத் தூதர் குறிப்பிடும் பகுதிகள் தமிழர்களின் பாரம்பரியத்தோடு தொடர்புடையவையாக கருதப்படுகிறது. இவ்விடங்களில் முதலீட்டாளர்களை அனுமதித்து பழைய அடையாளங்களை சிதைக்கும் குரூர புத்தியும் இதில் பிரதிபலிப்பதாக இலங்கை தமிழர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், இப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்னும் முழுமையாக மீண்டும் குடியேறவில்லை. அதற்குள்ளாகவே முதலீட்டாளர்களுக்கு நிலங்களை ஒதுக்கும் பணியில் அரசு மும்முரம் காட்டுகிறது. ஏற்கனவே பல்வேறு இடங்களில் தமிழர் பகுதிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுவதாக புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இதுகுறித்து ஐநாவும் இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டியது. இந்நிலையில் அரசின் இப்புதிய நடவடிக்கைகளின் விளைவுகள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் இலங்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications