ராகுல் சொன்னதால் கைவிடப்பட்ட நதிகள் இணைப்பு திட்டம்
டெல்லி: நதி நீர் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லாதது என்று ராகுல் காந்தி வலியுறுத்திக் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட நதி நீர் இணைப்புத் திட்டத்தை தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கைவிடுவதாக அறிவித்துள்ளது.
கடந்த தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நதி நீர் இணைப்புத் திட்டம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இளவரசராக கருதப்படும் ராகுல் காந்தி, இந்தத் திட்டம் சாத்தியமில்லாதது, இதனால் இயற்கையின் கட்டமைப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.
ராகுலே சொல்லிவிட்டால் அதை அமைச்சர் அமலாக்க முடியுமா?. இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷும் இந்தத் திட்டத்திற்கு எதிர்மறையாக கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து இத்திட்டம் கைவிடப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது திட்டம் கைவிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்து விட்டது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் லோக்சபாவில் பேசுகையில்,
இமயமலை மற்றும் தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த கிட்டத்தட்ட ரூ. 4.4 லட்சம் கோடி செலவு பிடிக்கும். இந்த செலவை அரசால் சமாளிக்க முடியாது. மேலும் அது சுலபமான வேலையும் கிடையாது. எனவே இந்தத் திட்டம் கைவிடப்படுகிறது.
இருப்பினும் தீபகற்ப நதிகளையும், இமயமலையிலிருந்து உற்பத்தியாகும் நதிகளையும் தனித் தனியாக இணைப்பது குறித்த சாத்தியக் கூறுகள் குறித்து அரசு ஆராயும்.
தீபகற்ப நதிகளை மட்டும் இணைக்கும் 14 திட்டங்களில் 5 திட்டங்களுக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் போலாவரம் பன்னோக்குத் திட்டம் ஒரு தேசியத் திட்டமாகும். இது விரைவில் முடிக்கப்படும். இதற்கு அமைச்சரவை ஒப்புதலும் தயாராகி விட்டது என்றார்.
மத்திய அரசின் இந்தப் பதில் மூலம் நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செயல்படுத்தப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது.
கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அப்போதைய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இருப்பினும் அதன் பின்னர் வந்த முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. தற்போதைய 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் இந்தத் திட்டம் கண்டு கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில்தான் இந்தத் திட்டத்தின் நிலையை ராகுல் காந்தி தனது பேச்சின் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தியிருந்தார். தற்போது அதிகாரப்பூர்வமாகவே இந்தத் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு இந்த நதிகள் இணைப்புத் திட்டம் மிக உதவியாக இருந்திருக்கும். அதில் மண்ணைப் போட்டுவிட்டனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications