ஜனவரிக்குள் 17 சமத்துவபுரங்கள் திறக்கப்படும்: மு.க.ஸ்டாலின்
நாகர்கோவில்: தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்குள் 17 சமத்துவபுரங்கள் திறந்து வைக்கப்படும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நாகர்கோவிலை அடுத்த ராமபுரம் ஊராட்சி லெட்சுமிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 வது சமத்துவபுரமான இங்கு 9 ஏக்கர் பரப்பளவில் ரூ. இரண்டே முக்கால் கோடி செலவில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பெரியார் சிலை, ரேஷன் கடை, குடிநீர் வினியோகம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு வீட்டு சாவி மற்றும் பத்திரங்களை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், 'தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 29 சமத்துவபுரங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. இதில் 12 திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 17 சமத்துவபுரங்கள் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் பணிகள் முடிவடைந்து திறந்து வைக்கப்படும்.
கூவம் தூய்மைப்படுத்தல், முக்கிய நகரங்களில் பாதாள சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் பல்வேறு கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திருச்செந்தூர், வந்தவாசி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி்.மு.க கூட்டணி அமொக வெற்றி பெறும்' என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications