திருச்செந்தூர்-வந்தவாசி: 42 வேட்பு மனுக்கள் ஏற்பு
தூத்துக்குடி: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் தாக்கலாகியுள்ள வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
திருச்செந்தூரில் 33 பேரும், வந்தவாசியில் 20 பேரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
திருச்செந்தூரில் தாக்கலான மனுக்களை தேர்தல் அதிகாரி துரை ரவிச்சந்திரன் பரிசீலனை செய்தார். இரு சுயேட்சைகளின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
மேலும், திமுக, அதிமுக, தேமுதிகவின் மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
வந்தவாசியில் 14 மனுக்கள் ஏற்பு:
இதேபோல வந்தவாசியில் நடந்த மனுக்கள் பரிசீலனையில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன.
இங்கு திமுக, அதிமுக, தேமுதிக உள்பட மொத்தம் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று நடந்த பரிசீலனையில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மனுக்களை வாபஸ் பெற நாளை மறுதினம் கடைசி நாளாகும். அன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கப்படும்.
வரும் 19ம் தேதி இங்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
இதற்கிடையே, இரு தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் தொகுதிக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த மீனாவும், வந்தவாசிக்கு ஆந்திராவைச் சேர்ந்த கிஷோரும் பார்வையாளர்களாக இருப்பார்கள்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications