இனி எஸ்எம்எஸ் மூலம் பென்ஷன் பற்றிய தகவல்!
சென்னை: பென்ஷன் மற்றும் ஓய்வூதியம் குறித்த தகவல்கள் இனி எஸ்எம்எஸ் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்று தமிழ்நாடு தணிக்கை மற்றும் கணக்குகள் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் துறை துணை அக்கவுண்டன்ட் ஜெனரல் பி.கோபால் (பென்ஷன்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தலைமை கணக்காயர் (கணக்கு மற்றும் பணிவரவு) கே.ஸ்ரீனிவாசன், மாநில அரசு ஓய்வூதியதாரர் மற்றும் பொதுசேமநல நிதி சந்தாதாரர்களுக்கான எஸ்.எம்.எஸ்.சேவையை (குறுந்தகவல் சேவை) தொடங்கியுள்ளார்.
முதல் கட்டமாக, கணக்காயர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரரின் விண்ணப்பம் பெறப்பட்ட உடனே அதைப் பற்றிய தகவல் உடனடியாக ஓய்வூதியதாரருக்கு அனுப்பப்படும். ஓய்வூதிய வழக்காணை (பென்ஷன் பேமண்ட் ஆர்டர்) அனுப்பும்போது, மறுபடியும் ஒரு எஸ்.எம்.எஸ். ஓய்வூதியதாரர்களுக்கு அனுப்பப்படும். ஒருவேளை விண்ணப்பத்தில் ஏதாவது குறையிருந்து திருப்பி அனுப்பப்பட்டால் அந்த தகவலும் எஸ்.எம்.எஸ்.மூலம் தெரிவிக்கப்படும்.
இரண்டாம் கட்டமாக, இந்த திட்டம் பொதுசேமநல நிதி கணக்கு முடிப்பு (Final Withdrawal) மற்றும் இதர தகவல்கள் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் இந்த அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு வசதியாக விரைவில் செல்போன் நம்பர் அறிவிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications