எங்க எதிரி அனிதா ராதாகிருஷ்ணன்தான் - ஓ.பி
திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அதிமுகவின் பொது எதிரி கருணாநிதி அல்ல. மாறாக அனிதா ராதாகிருஷ்ணன்தான் என்று கூறியுள்ளார் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம்.
திருச்செந்தூரில் சட்டசபை இடைத்தேர்தல் பணிகள் குறித்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்தது.
அப்போது அவர் கூறுகையில்,
அதிமுக தொண்டர்களின் உழைப்பும், கட்சி சின்னமும் நமக்கு வெற்றியைத் தேடித்தரும். இத்தேர்தலில் நமக்கு பொது எதிரி முதல்வர் கருணாநிதி அல்ல; அம்மாவுக்கு துரோகம் செய்து கட்சி மாறி இங்கு திமுக வேட்பாளராக போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணன் தான் நமது முதல் எதிரி.
அனிதா ராதாகிருஷ்ணன் செய்த துரோகத்தால் இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. அவருக்கு தொண்டர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். நீங்கள் புகட்டும் பாடத்தின் மூலம், இனி எவரும் அம்மாவுக்கு துரோகம் செய்ய முடியாது என்ற நிலை ஏற்படவேண்டும்.
மின்னணு ஓட்டு இயந்திரத்தில் அதிகாரிகள் துணையுடன், தி.மு.க. வினர் முறைகேடு செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே ஓட்டுப்பதிவு அன்று அதை நாம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
அழகிரி ஸ்டைலில் செயின் பரிசு...
இத் தொகுதியில், கட்சி சார்பில் 47 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிக ஓட்டுக்களை வாங்கித் தந்து முதலிடம் பிடிப்பவருக்கு ஐந்து சவரன் தங்கச் செயினும், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு மூன்று சவரன் தங்கச் செயினும், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு இரண்டு சவரன் தங்கச் செயினும் அம்மாவின் கையால் வழங்கப்படும். எனவே, நமது வேட்பாளர் வெற்றி பெற கடுமையாக உழையுங்கள் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
சமீபத்திய ஐந்து தொகுதி இடைத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் மாவட்ட செயலாளர்களுக்கு தங்கச் சங்கிலி தருவதாக மு.க.அழகிரி கூறியிருந்தார். தற்போது அதே பாணியில் அதிமுகவும் செயின் தர இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் கேள்வி -
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை இழிவுப்படுத்திய அமைச்சர் ரமேஷ்! அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்












Click it and Unblock the Notifications