தனி தெலுங்கானா-காங்கிரசும் களமிறங்குகிறது
ஹைதராபாத்: தனி தெலுங்கானா கோரிக்கை குறித்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வரும் தனி தெலுங்கானா கோரிக்கை, தற்போது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகரராவின் போராட்டத்தால் ஆந்திராவில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனித் தெலுங்கானா பிரச்சினை குறித்து விவாதிக்க எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு கமிட்டி ஒன்றை அப்போதைய நிதி அமைச்சரும், தற்போதைய முதல்வருமான ரோசய்யா தலைமையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது இன்னும் தொடங்கப்படாத நிலையிலேயே உள்ளது.
இது குறித்து ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் கூறுகையில், இந்த ஆய்வுக்கமிட்டியை புதுப்பிக்கவேண்டும். இதில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படவேண்டும். இந்த கமிட்டியின் மூலம் 5, 6 மாதங்களில் அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் சமர்பிக்கலாம்.
அப்போதும் தனி தெலுங்கானா குறித்து மத்திய அரசு திருப்தியடையவில்லை என்றால் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்கு எதிராக குரல் கொடுக்கலாம்' என்று தெரிவித்தார்.
மீண்டும் தீ்க்குளிப்பு:
தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவை கைது செய்தபோது அவரின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தி்ன் போது தீ்க்குளித்த தொண்டர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரீம் நகர் அருகே எல்.பி நகர் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (28) என்ற தொண்டர் தீக்குளித்தார்.
உடலில் 70 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications