தமிழகம், புதுச்சேரியில் மழை மேலும் நீடிக்கும்
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், 'இலங்கையின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதன் தாக்கம் தெற்கு ஆந்திர கரையோரம் வரை நீடித்துள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு பகுதியில் மழை நீடிக்கும். தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வரை 5ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மழை பெய்யும்' என்றார்.
தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. நேற்று வல்லத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 34.2 மி.மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 4.7 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.
10 மாவட்டங்களில் அதிக மழை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் 10 மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 860 மி.மீ. மழை பெய்துள்ளது. இது எப்போது இல்லாத அளவாக 30 சதவீதம் கூடுதல்.
இதே போல் நீலகிரியில் 820 மி.மீ மழை பெய்துள்ளது. மேலும், கடலூர், திருவாரூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்துள்ளது.
சென்னை, அரியலூர், கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, திருச்சி, விருதுநகர் ஆகிய இடங்களில் இயல்பான அளவே மழை பெய்துள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இயல்புக்கு குறைவான அளவு மழையே பதிவாகியுள்ளது.
சென்னை ஏரிகளின் நிலவரம்:
சென்னை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம் பாக்கம், வீராணம் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
புழல் ஏரியில் 12.69 அடி, பூண்டி ஏரியில் 32.58 அடி, சோழவரம் 14.06 அடி, செம்பரம்பாக்கம் 15.17 அடி, வீராணம் ஏரியில் 13.40 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
சென்னைக்கு குடிநீ்ர் வழங்கும் இந்த ஏரிகளில் மொத்த நீர் இருப்பு தற்போது 7186 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications