பாக்.குக்கு பணம், ஆயுதம் மட்டுமே குறி-அமெரிக்கா
வாஷிங்டன்: பாகிஸ்தான் அரசு அமெரிக்காவுடனும், அதிபர் ஒபாமாவுடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டாமல், பணம், ஆயுதம் ஆகியவற்றைப் பெறுவதிலேயே குறியாக இருப்பதாக ஜனநாயகக் கட்சி செனட்டர் ராபர்ட் மெனிடஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வெளியுறவு விவகாரக் கமிட்டி முன்பு அவர் பேசுகையில், பாகிஸ்தானுடன் நாம் எந்த வகையான பாதுகாப்பு ஒத்துழைப்பை வைத்திருக்கிறோம் என்று எனக்கு சரியாக புரியவில்லை. அவர்களுடன் பாதுகாப்பு உறவை பலப்படுத்த வேண்டும் என்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட உறவை அவர்கள் விரும்புவது போலவே தெரியவில்லை.
அவர்களுக்குத் தேவை பணம், நிறைய ஆயுதங்கள் மட்டுமே. அதேசமயம், நம்முடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை.
பாகிஸ்தானுக்கு நிபந்தனையற்ற ஆயுத உதவிகளை அமெரிக்க அரசு கொடுப்பதை நான் விரும்பவில்லை. அந்த கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் நாம் படைகளைக் குவிக்க குவிக்க பாகிஸ்தானை அதிக அளவில் நம்பியிருக்கும் நிலை ஏற்படும் என நான் கருதுகிறேன்.
பாகிஸ்தானுக்கு எந்த உதவி அளி்ப்பதாக இருந்தாலும் அது நிபந்தனையுடன் கூடியதாகவே அமைய வேண்டும் என நான் கருதுகிறேன். இஸ்லாமாபாத் எந்த அளவுக்கு தனது பொறுப்பில் தீவிரமாக இருக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அது எடுத்து வரும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் தெரிகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றார் மெனிடஸ்.
மெனிடஸ் தீவிர பாகி்ஸ்தான் எதிர்ப்பு ஜனநாயகக் கட்சி செனட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications