தகவல் ஆணையர் தேர்வு- பிரதமருக்கு நோட்டீஸ்!

டெல்லியைச் சேர்ந்த கிருஷ்ணா ராவ் என்பவர் சார்பில் அவரது வழக்கறிஞர் அப்துல் ரஷீத் குரேஷி இதை அனுப்பியுள்ளார்.
அதில், தகவல் உரிமை அறியும் ஆணையத்துக்கு புதிய தலைமைத் தகவல் ஆணையரைத் தேர்வு செய்வதற்கான நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறை இருக்கவேண்டும். இதில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது.
இந்திய அரசும், குறிப்பாக பிரதமர் அலுவலகமும் இந்த சட்ட கடமையைச் செய்ய தவறிவிட்டன. எனவே இந்த நோட்டீஸ் மூலம் புதிய ஆணையர் நியமனத்தில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இதனால் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் நடைபெறுவது தடுக்கப்பட்டு விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, பணியாளர் துறை அமைச்சர் பிரித்விராஜ் சவான் ஆகியோருக்கும் நோட்டீஸ் போயுள்ளது.
நீதிபதிகள் நியமனம் - தகவல் ஆணைய உத்தரவுக்கு தடை
இதற்கிடையே உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் குறித்த தகவல்களையும், மத்திய அமைச்சர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை மிரட்டிய விவகாரம் குறித்த தகவல்களையும் தருமாறு கூறி மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தது.
இதுதொடர்பாக தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications