இந்தியாவை தாக்க லஷ்கருக்கு அல்-கொய்தா உதவி: யுஎஸ்
வாஷிங்டன்: இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு அல் கொய்தா அமைப்பு உதவி வருவதாக அமெரிக்கா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டத்தைத் தூண்டி இரு நாடுகளையும் மோத விடுவதற்காக லஷ்கரை தூண்டி விட்டு உதவிகளைச் செய்து வருகிறது அல் கொய்தா என்றும் கேட்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் வெளியுறவு விவகாரக் கமிட்டி முன்பு அவர் பேசுகையில், இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்கு, லஷ்கர் இ தொய்பாவுக்கு அல் கொய்தா உதவி வருகிறது. முக்கியத் தகவல்கள், இடங்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்டவற்றை லஷ்கர் இ தொய்பாவுக்கு அல் கொய்தா அளிக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி நிலவக் கூடாது. இரு நாடுகளிடையேயும் மோதலை ஏற்படுத்த வேண்டும், பாகிஸதான் சீர்குலைய வேண்டும் என்பதே அல் கொய்தாவின் எண்ணம்.
லஷ்கருடன் மட்டுமல்லாது பாகிஸ்தான் தலிபான் அமைப்பான தெஹரீக் இ தலிபானுக்கும் அல் கொய்தாதான் உதவி வருகிறது. பாகிஸ்தான் அரசுக்கு எதிரான தாக்குதல்களை அல் கொய்தாதான் தெஹரீக் இ தலிபானுக்கு வகுத்துக் கொடுத்து தாக்குதலை நடத்தி வருகிறது. அரசை நிலை குலைய வைக்க இவ்வாறு செயல்படுகிறது அல் கொய்தா.
தொழில்நுட்பத் தகவல்கள், தார்மீக ஆதரவு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் இந்த இரு தீவிரவாத அமைப்புகளுக்கும் அல் கொய்தா செய்கிறது.
அதேபோல ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கும் அல் கொய்தா பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வருகிறது.
கடந்த ஆண்டு இருந்ததை விட தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நிலைமை மிகவும் அபாயகரமானதாக உள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மட்டுமல்லாமல், இந்தப் பிராந்தியம் முழுவதுமே நிலை குலைந்து போக வேண்டும் என்பதே அல் கொய்தாவின் திட்டமாக உள்ளது.
தற்போது இந்தப் பிராந்தியத்தில் நடந்து வரும் அனைத்துத் தீவிரவாத செயல்களுக்கும் மூளையாக, இதயமாக இருப்பது அல் கொய்தா அமைப்புதான். தற்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கக் கிளம்பினால் அதன் வேர் ஆப்கன்- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போய் நிற்பதைப் பார்க்க முடிகிறது.
இங்கு மட்டுமல்லாமல் அமெரிக்காவாகட்டும், சோமாலியாவாகட்டும், இங்கிலாந்தாகட்டும், உலகின் எந்தப் பகுதியாக இருக்கட்டும். அனைத்து தீவிரவாத தாக்குதல் மற்றும் சதித் திட்டங்களில் அல் கொய்தாதான் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா புற முதுகு காட்டி விடக் கூடாது. அல் கொய்தா, தலிபான்களை அழிக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. பாகி்ஸ்தான் படையினரும், ஸ்வாத் பள்ளத்தாக்கு, வசிரிஸ்தான் ஆகிய பகுதிகளில் தலிபான்களை அழிப்பதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்த முயற்சிகளை அமெரிக்கா சரியாக பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் தலைவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நடக்க வேண்டும் என்றார் கேட்ஸ்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications