தங்கம்.. மகிழ்ச்சி தரும் வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலையில் இன்றும் சற்று ஆறுதல் தரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கம் வரை படுவேகத்தில், ஒரு மாதத்தில் சவரனுக்கு 1400 ரூபாய் வரை ஏறிய தங்கம், கடந்த இரு தினங்களாக சற்று குறைந்து வருகிறது.
நேற்று தங்கத்தின் விலையில் ரூ.144 குறைந்து ரூ.1687க்கு விற்கப்பட்டது.
இன்று (சனி) தங்கம் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1638 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
ஒரு பவுன் ஆபரண தங்கம் இன்று காலை ரூ.13,104 ஆக விற்பனை செய்யப்பட்டது. இது நேற்றைய விலையை விட ரூ.392 குறைவாகும்.
ஒரு கிராமிற்கு 49 ரூபாய் சரிவு ஏற்பட்டதால் இன்று நகை வாங்க சென்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த 2 நாட்களில் ஒரு பவுன் தங்கம் விலை 624 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications