அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகளுக்கு எச்சரிக்கை
சென்னை: அங்கீகாரம் இல்லாத, அங்கீகாரத்தைப் புதுப்பிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாபப்பட்டனத்தில் உள்ள தேவி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் சென்ற வேன் கோவில் குளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் ஆசிரியை மற்றும் 9 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர்.
சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் புதுக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து தற்போது பள்ளியை மூட உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் மணி கூறுகையில்,
இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து மெட்ரிக் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் அங்கீகாரத்தை புதுப் பிக்காமல் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் விவரத்தை திரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.
அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் தமிழகம் முழுவதும் பள்ளி பேருந்துகள், வேன்களில் கூடுதலாக மாணவர்களை ஏற்றிச் செல்கிறார்களா, அவற்றை ஓட்டும் டிரைவர்கள் முறையான ஓட்டுநர் உரிமத்துடன் இருக்கிறார்களா என்பது குறித்தும் போக்குவரத்துத் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications