திருச்செந்தூர், வந்தவாசியில் ஜெ. நான்கு நாள் சூறாவளி பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் நான்கு நாள் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். இரு தொகுதிகளின் பட்டி தொட்டியெங்கும் அவர் சூறாவளி பிரசாரம் செய்யவுள்ளார்.

ஒரு தொகுதிக்கு 2 நாள் வீதம் நான்கு நாட்கள் இரு தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை...

12, 13ந் தேதிகளில் திருச்செந்தூரிலும், 15, 16 ந் தேதிகளில் வந்தவாசியிலும் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். 2 தொகுதிகளிலும் அவர் 31 ஊர்களில் பேசுகிறார்.

ஜெயலலிதா பிரசார சுற்றுப்பயண விவரம்:

12ம் தேதி - புன்னக்காயல், வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், நல்லூர், குரும்பூர், அம்மன்புரம், சோனகன்விளை.

13ம் தேதி - ஆறுமுகநேரி, காயல்பட்டணம், வீரபாண்டியன் பட்டணம், குலசேகரபட்டணம், உடன்குடி, பரமன்குறிச்சி, திருச்செந்தூர் தெற்கு ரதவீதி, திருச்செந்தூர் வ.உ.சி. திடல்.

15ம் தேதி - தெள்ளார், கொடியாலம் கூட்டு ரோடு, கொடியாலம் ஊராட்சி, கொடியாலம் காலனி, தெய்யார் ஊராட்சி, நல்லூர்கூட்டு ரோடு, நல்லூர் ஊராட்சி, ராமசமுத்திரம் ஊராட்சி, ஏம்பலம் கூட்டுரோடு, ஏம்பலம் ஊராட்சி, நடுக்குப்பம் கூட்டுரோடு (வந்தவாசி ரோடு), வந்தவாசி ஐந்து கண்பாலம், வந்தவாசி கோட்டை மூலை, எச்சூர், எச்சூர் காலனி, புரிசை, அனப்பத்தூர் கூட்டு சாலை (செய்யார் சர்க்கரை ஆலை), விநாயகபுரம், அனக்காவூர், அத்திக்குளம், தவசி, இருங்கல், செங்காடு, கூழமந்தல், கீழ்நீர்குன்றம், இளநீர் குன்றம் காலனி, இளநீர்குன்றம், நெடுங்கல், மெயின்ரோடு (காஞ்சிபுரம் வந்தவாசி ரோடு), தேத்துறை,

16ம் தேதி மேல்மா கூட்டு சாலை, வீரம்பாக்கம் புதூர், தென்னாங்கூர், சளுக்கை கூட்டு ரோடு, சளுக்கை, வெண்குன்றம், வந்தவாசி (மேல் மருவத்தூர் ரோடு), சென்னாவரம், பிருதூர், கடைசிகுளம், மருதாடு, கல்லாங்குத்து, கீழ் கொடுங்கலூர் கூட்டு ரோடு, சாலவேடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ஜெ., ஸ்டாலின், விஜயகாந்த் பிரசாரம்...

திருச்செந்தூர் தொகுதியில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் 13ம் தேதி ஒரே நாளில் பிரசாரம் செய்யவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நாளில் தங்கபாலுவும் திருச்செந்தூரில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

இதேபோல, வந்தவாசி தொகுதியில், மு.க.ஸ்டாலின் 15, 16, 17-ம் தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

விஜயகாந்த்தும் 15, 16 ஆகிய தேதிகளில் வந்தவாசியில் பிரசாரம் செய்கிறார். அதே நாளில் ஜெயலலிதாவும் பிரசாரம் செய்யவுள்ளதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+