இளங்கோவனைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்
சென்னை: முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் - இயக்குநர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மெமோரியல் ஹால் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கைகளில் கண்டன அட்டைகளும் வைத்திருந்தனர்.
இது குறித்து சீமான் கூறுகையில்,
"கடந்த மாதம் 26-ம் தேதி ஈரோட்டில் வைத்து தமிழரின் தேசிய தலைவர் பிரபாகரனின் படத்தை கிழித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவமானப்படுத்தினார். இந்த சம்பவம் இங்குள்ள தமிழர்களின் உணர்வை பாதிக்கும் என்று தெரிந்தும் அவர் இப்படி நடந்து கொண்டார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் வீட்டின் மீது யாரோ பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் கைது செய்யப்பட்ட 4 பேரும் எந்த தவறும் செய்யாதவர்கள். அவர்கள் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 4 பேரின் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்யவேண்டும். அவர்கள் விடுதலை செய்யப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.." என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications