26/11: ஹெட்லி, ராணா தொடர்பு குறித்த தகவலுடன் எப்.பி.ஐ குழு டெல்லி வருகை

பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கரான தாவூத் கிலானி என்கிற ஹெட்லியும், பாகிஸ்தானில் பிறந்த கனடியரான ராணாவும், இந்தியா மற்றும் டென்மார்க்கில் தீவிரவாத வேலைகளை நிகழ்த்த லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து செயல்பட்டதாக கூறி கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், மும்பையில் கடந்த ஆண்டு நடந்த வெறித்தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது பற்றி பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக எப்.பி.ஐ. வட்டாரத்த் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும் இதுகுறித்து எப்.பி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது.
இந்த நிலையில் அதிபர் ஒபாமாவின் உத்தரவுப்படி ஹெட்லி- ராணா விசாரணை குறித்த தகவல்களை இந்தியாவிடம் பகிர்ந்து கொள்வதற்காக எப்.பி.ஐ குழு ஒன்று இந்தியா வந்துள்ளது.
ராணா, ஹெட்லியை விசாரிக்க இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் அமெரிக்கா சென்றிருந்தனர். ஆனால் அதற்கு அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் நாடு திரும்பி விட்டனர்.
இதையடுத்து அமெரிக்கா சென்றபோது அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து விவாதித்தார். இதையடுத்து எப்.பி.ஐ. குழுவை டெல்லி சென்று ஹெட்லி- ராணா விசாரணை குறித்து இந்தியாவிடம் விளக்க ஒபாமா உத்தரவிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
அதன்படியே தற்போது எப்.பி.ஐ. குழு டெல்லி வந்துள்ளது. இக்குழுவினர் இன்று இந்தியத் தரப்பிடம் ஆலோசனை மேற்கொள்கின்றனர். அப்போது முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த சமயத்தில், ஹெட்லிக்கும், ராணாவுக்கும் மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களையும் இந்தியாவிடம் எப்.பி.ஐ. வழங்கும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications