வெள்ளம்: நீலகிரிக்கு உதவி: வேலூர் எம்பி கோரிக்கை
டெல்லி: நீலகிரியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு முழு உதவிகளையும் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வேலூர் எம்.பி அப்துர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.
இயற்கைப் பேரரிடர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று அப்துர் ரஹ்மான் பேசியதாவது:
சமீபத்தில் நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் பாதிப்பு சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
நீலகிரி பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, மக்களுக்கு அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களும், உணவு வகைகளும் சென்றடைய முடியாத நிலை.
போக்குவரத்து வசதியும், தொலைத் தொடர்பு வசதியும் கூட முற்றிலும் துண்டிக்கப்பட்டன. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள், நிவாரணப் பொருட்களும், உதவித் தொகையும் அளிக்கப்பட்டன.
1,800க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்த நிலையில், அவர்களுக்கு தனித்தனியாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்காலிக குடியிருப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.
பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவதால் மத்திய, மாநில பொருளா தார வளர்ச்சிக்கு பெருமளவில் நீலகிரி பங்காற்றி வருகிறது. எனவே, இதை கவனத்தில் கொண்டு மத்திய அரசு தமிழக அரசுக்கு முழு அளவிலான உதவிகளை செய்யவேண்டும்.
என்னுடைய வேலூர் நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட ஆம்பூரிலும் சில மாதங்களுக்கு முன் தொடர் மழையால் திடீர் வௌளம் ஏற்பட்டு ஆற்றோரப் பகுதிகளில் உள்ள குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.
இத்தகைய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட தாமாக முன்வந்து உதவிகள் செய்ய மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளில் முழுமையான சீரமைப்புப் பணிகள் நிறைவேற மத்திய அரசு தாராளமாக உதவிகள் செய்ய வேண்டும் என்றார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications