கோபன்ஹேகன்-நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
டெல்லி: கோபன்ஹேகன் புவிவெப்ப மாற்ற மாநாட்டில் இந்தியாவின் நலனைப் புறக்கணிக்கும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இன்று ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
ஆனால் அவரது விளக்கத்திற்கு அதிருப்தி தெரிவித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
ராஜ்யசபாவில் இன்று பூஜ்ய நேரத்தின்போது புவிவெப்ப மாற்ற மாநாடு குறித்து பிரச்சினை எழுப்பப்பட்டது.
பாஜக தலைமையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அரசை கடுமையாக குறை கூறி பேசினர்.
பாஜக தலைவர் அருண் ஜேட்லி பேசுகையில், இந்தியா தன்னிச்சையாக 20 முதல் 25 சதவீத புகை மாசைக் குறைக்கும் என அறிவித்தது மோசமான முன்னுதாரணமாகும். எதிர்க்கட்சியினரை கலந்து ஆலோசிக்காமல் அரசு இவ்வாறு அறிவித்தது தவறு. இந்தியாவின் நலனை விட்டுக் கொடுத்து விட்டது மத்திய அரசு.
ஏற்கனவே இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நிலையிலிருந்து மத்திய அரசு மொத்தமாக மாறியுள்ளது. எந்தவிதமான சட்ட கட்டுப்பாட்டையும் இந்தியா ஏற்காது என்று முன்னர் மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்த நிலையில் மாற்றம் தெரிகிறது என்றார் ஜேட்லி.
இதற்குப் பதிலளித்த ஜெய்ராம் ரமேஷ், எங்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. கோபன்ஹேகன் மாநாட்டில் இந்தியாவின் நலனை மத்திய அரசு விட்டுக் கொடுக்காது. எந்தவிதமான சட்ட கட்டுப்பாட்டுக்கும் இந்தியா உடன்படாது. இதில் மாற்றமே இல்லை என்றார்.
இருப்பினும் அவரது பதிலில் திருப்தி அடையாத எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
பாஜக தவிர சமாஜ்வாடிக் கட்சி, இடதுசாரிகள், அதிமுக ஆகியவையும் வெளிநடப்பில் கலந்து கொண்டன.
இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், இது திட்டமிட்ட வெளிநடப்பு, வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நடந்து கொண்டுள்ளனர் எதிர்க்கட்சியினர் என்றார்.
புவிவெப்ப மாநாடு இன்று கோபன்ஹேகனில் தொடங்கியுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications