ரூ.1000க்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி: டாடா அறிமுகம்!
மும்பை: ரூ 1 லட்சத்துக்கு நானோவை அறிமுகப்படுத்தி கார் புரட்சி செய்த டாடா நிறுவனம் அடுத்து குறைந்த விலை கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்வாச் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ள இந்த சாதனத்தின் விலை ரூ. 1000.
தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் அழித்து சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சுத்திகரிப்பு கருவி நானோ தொழில் நுட்பத்தில் நெல் உமியை அழுத்தி, வெள்ளி முலம் பூசப்பட்ட உருளையில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணிர் மேல் நோக்கி சென்று சுத்தரிகரிக்கப்படுகிறது.
இது குறித்து டாடா சன்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர்.கோபாலகிருஷ்ணன், டாடா கெமிக்கல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.முகுந்தன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
"டாடா கெமிக்கல்ஸ், டாடா கன்சல்டன்ஸி, டைட்டன் ஆகிய நிறுவனங்களின் முயற்சியால், பூனாவில் உள்ள டாடா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு போட்டியாக வேறு குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் இல்லை. இந்த தொழில் நுட்பத்தில் வேறு குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் இல்லை. இது இயங்குவதற்கு மின்சாரம் தேவையில்லை.
இதை தயாரிப்பதற்கு ஹால்டியாவில் தொழிற்சாலை நிறுவப்படும். இங்கு பத்து இலட்சம் குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் தயாரிக்கப்படும்.
இந்த ஆலை அடுத்த சில மாதங்களில் மாதங்களில் மேலும் பத்து இலட்சம் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் தாயரிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும். இந்த தொழிற்சாலைக்காக ஏற்கனவே ரூ.20 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து வருடங்களில் மேலும் ரூ.100 கோடி முதலீடு செய்யப்படும்..", என்றனர்.
முதலில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மட்டும் விற்பனைக்கு வரும் இந்த சாதனம், படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் விரிவாக்கப்படும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications