லோக்சபா போல ராஜ்யசபா எம்.பிக்களும் டிமிக்கி!
டெல்லி: லோக்சபாவில் கேள்வி கேட்டு விட்டு சபைக்கு வராமல் இருந்த எம்.பிக்களைப் பார்த்து இப்போது ராஜ்யசபா எம்.பிக்கள் ஆறு பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இதை சுட்டிக் காட்டிய ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி, லோக்சபா வைரஸ் தற்போது ராஜ்யசபாவுக்கும் பரவியிருப்பதாக அதிருப்தி தெரிவித்தார்.
இன்று ராஜ்யசபாவில் கேள்வி நேரம் தொடங்கியதும் முதல் கேள்வி கேட்டவரை பேச அழைத்தார் அன்சாரி. ஆனால் அவர் சபையில் இல்லை. அதேபோல மொத்தம் ஆறு எம்.பிக்கள் கேள்வி கேட்டு விட்டு சபைக்கு வரவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்தார் அன்சாரி. இது என்ன வைரஸா?, லோக்சபாவைத்தான் இது தாக்கியது. இப்போது இங்கும் பரவி விட்டதா? என்று அதிருப்தியுடன் அவர் தெரிவித்தார்.
கேள்வி கேட்டு விட்டு சபைக்கு வராத அந்த ஆறு எம்.பிக்கள் - அன்பழகன் (அதிமுக), பிரபா தாக்கூர், ராஜீவ் சுக்லா (இருவரும் காங்கிரஸ்), வரீந்தர் சிங் பாஜ்வா (அகாலிதளம்), நந்த குமார் சாய் (பாஜக), சபீர் அலி (லோக் ஜனசக்தி கட்சி).
இன்று மட்டுமல்லாமல் நேற்றும் சிலர் ஆப்சென்ட் ஆகியிருந்ததாக கூறிய அன்சாரி இந்தப் போக்கு வருத்தம் தருவதாக கூறினார்.


Click it and Unblock the Notifications
