அடுத்த ஆண்டில் இந்தியா வருகிறார் புடின்
மாஸ்கோ: ரஷ்யாவின் சக்தி வாய்ந்த தலைவரான பிரதமர் விலாடிமிர் புடின் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வருகிறார்.
ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பை ஏற்று புடின் இந்தியா வர சம்மதம் தெரிவித்துள்ளார்.
நேற்று அதிபர் மெத்வதேவுடன் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மன்மோகன் சிங், பின்னர் புடினை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, அடுத்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு நீங்கள் வர வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுப்பதை பெருமையாக கருதுகிறேன். உங்களது வருகை இரு தரப்பு உறவுகளை மேலும் வலுவுடையதாக்கும்.
அதிபராக இருந்தபோது கடந்த 2000மாவது ஆண்டு தாங்கள் இந்தியாவுக்கு வந்திருந்தபோதுதான் இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
அந்த வருகை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இரு தரப்பு உறவுகளுக்கும் பலமான அஸ்திவாரத்தை ஏற்படுத்த அது உதவியது என்றார் சிங்.
பின்னர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்பதாக தெரிவித்தார் புடின்.
இன்று நடைபெறும் இந்திய - ரஷ்ய தொழிலதிபர்கள் கூட்டத்தில் மன்மோகன் சிங்கும், புடினும் பேசவுள்ளனர்.
இந்த மாநாட்டுக்கு முகேஷ் அம்பானியும், ரஷ்யாவின் சிஸ்டமா நிறுவனத்தின் தலைவர் விலாடிமிர் எவ்டுஷென்கோவும் தலைமை தாங்குகின்றனர்.
இந்த சிஸ்டமா நிறுவனம்தான் எம்டிஎஸ் என்ற பெயரில் இந்தியாவில் செல்போன் சேவையை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications