கருணாநிதி, ஸ்டாலின் சொத்துப்பட்டியல் வெளியிட வேண்டும்: தலித் தலைவர்
கரூர்: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் தங்களின் சொத்துப்பட்டியலை வெளியிடவேண்டும் என்று தலித் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தலித் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் நேர்மையுடனும், உண்மையுடனும் இருக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் முதன்முதலாக நாமக்கல் மாவட்ட கலெக்டராக உள்ள சகாயம் தனது சொத்துப்பட்டியலை வெளியிட்டு தனது நேர்மையை மக்களுக்கு வெளிப்படுத்தினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துப்பட்டியலை வெளியிட்டு முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள். அதே போன்று தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களும், மத்திய மாநில அமைச்சர்களும் தங்களது சொத்து விவரத்தை பொது மக்களுக்கு தெரிவிக்க முன்வர வேண்டும் . இந்த செயல் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருக்கும்.
குறிப்பாக தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் தங்களது சொத்துப் பட்டியலை உடனே வெளியிட முன் வர வேண்டும்' என்றார்.


Click it and Unblock the Notifications
