தேர்தல் முடிந்ததும் தமிழர் பிரச்னைக்கு தீர்வு- இந்தியாவிடம் இலங்கை உறுதி
டெல்லி: இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்த உடனடியாக தமிழர் பிரச்னை குறித்து அரசியல் ரீதியான தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்வோம் என்று இந்தியாவிடம் இலங்கை அரசு உறுதி அளித்துள்ளதாக இலங்கை அரசின் ஆலோசகரும், ராஜபக்சே சகோதரருமான பசில் ராஜபக்சே கூறினார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பிகளும், அரச பதவிகளில் உள்ளவர்களுமான கோத்தபயா ராஜபக்சே, பசில் ராஜபக்சே மற்றும் ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோர் டெல்லி வந்துளளனர்.
இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை இவர்கள் இன்று சந்தித்து பேசினர். சந்திப்புக்கு பின்னர் பசில் ராஜபக்சே நிருபர்களிடம் பேசுகையில், சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. முமாமி்ல் உள்ள தமிழர்கள் அனைவருக்கு அனைத்து ஜனநாயக உரிமைகளும் கொண்டுள்ளனர். அவர் ஓட்டு கூட போடப்போகிறார்கள்.
இலங்கையில் தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு குறித்து அதிபர் தேர்தல் முடிந்த உடனடியாக வேண்டிய முயற்சிகளை மேற்கொள்வோம். தேவையான சட்டத்திருத்தங்களையும் செய்யத்தயாராக இருக்கிறோம். இதுகுறித்து அமைச்சரிடம் உறுதி அளித்துள்ளோம்' என்றார்.
இலங்கை தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக, இந்திய அரசு 500 கோடி ரூபாய் தந்துள்ளது. மேலும் 500 கோடி வழங்கப்படும் என உறுதியளித்தது. இந்நிலையில், இலங்கையில் நடைபெறும் மறுகுடியமர்த்தல் நடவடிக்கைகள் எந்தளவில் உள்ளது என்பது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அடுத்தமாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் வெற்றி தொடர்பாக முக்கிய ஆலோசனைகளைப் பெறவே இலங்கைக் குழு இந்தியா வந்துள்ளதாக நம்பப்படுகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications