விளம்பரதாரர் விலகல் எதிரொலி - அமெரிக்காவை விட்டு வெளியேற உட்ஸ் முடிவு

மனைவி எலினுடன் விரைவில் ஸ்வீடன் அருகே உள்ள தனி தீவுக்கு உட்ஸ் கிளம்பிச் செல்லலாம் என்று கூறப்படுகிறது.
பெண் தொடர்பு சர்ச்சை வெடித்த நாள் முதல், கடந்த 2 வாரங்களாக உட்ஸ் வெளியுலகுக்கு வரவே இல்லை. அதேபோல அவரது மனைவியும் வெளியில் தலை காட்டாமல் உள்ளார்.
இந்த நிலையில் டைகர் உட்ஸின் ஸ்பான்சர்கள் விலகத் தொடங்கியுள்ளனர். கேட்டோராட் என்ற விளம்பர நிறுவனம், உட்ஸுடன் வைத்துள்ள ஐந்து ஆண்டு விளம்பர உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
100 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் இது. கடந்த 2007ம் ஆண்டு இது கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் முறிக்கப்பட்டுள்ளதன் மூலம் உட்ஸுக்கு 40 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்.
இதேபோல உட்ஸுடன் தொடர்பு வைத்துள்ள மேலும் பல ஸ்பான்சர்களும் விலகிக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.
இதன் காரணமாக ஸ்வீடன் அருகே தான் வாங்கி வைத்துள்ள தீவுக்கு நிரந்தரமாக உட்ஸ் இடம் பெயருவார் எனத் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications