கோவையில் பிப். 6ல் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு
நெல்லை: உலக தமிழர்கள் பாதுகாப்பிற்காக கோவையில் பிப் 6,7 ஆகிய தேதிகளில் உலக தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட உள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஈழத் தமிழர்கள் தங்களுக்கு சுய நிர்ணயம் கேட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் போராடியும் அந்த உரி்மை கிடைக்கவில்லை.
இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஐரோப்பியா, அமெரிக்கா உள்பட ஐநா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இந்திய அரசு இதுவரை எவ்வித கண்டனமும் தெரிவிக்கவிலலை.
தாய் தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி கர்நாடகா, மகாராஷ்டிரா செல்லும் தமிழர்கள் மிக எளிதாக தாக்கப்படுகின்றனர்.
மக்களின் வாழ்வுரி்மை பிரச்சனை எதுவும் தீ்ர்க்கப்படவில்லை. குறிப்பாக ஆந்திராவில் பாலாறு, கர்நாடகாவில் காவேறு, கேரளாவில் முல்லை பெரியாறு, தமிழக கிழக்கு கடற்கரை கச்சத்தீவு ஆகிய பிரச்சனைகளை அரசியலுக்கு அப்பாற்றப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
உலக தமிழர் பாதுகாப்புக்காக புதிய தமிழகமும், தமிழ் ஆர்வலர்களும் சேர்ந்து கோவை வஉசி பூங்கா திடலில் உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டை 6,7 பிப்-ல் நடத்த திட்டமிட்டுள்ளன.
இதில் இலங்கை உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளி்ல் இருந்து தமிழ் பிரதிநிதிகள பங்கேற்கிறார்கள். மாநாட்டில் பிப் 6ல் வீரவணக்கம், அஞ்சலி, கருத்தரங்கு ஆகிய நிகழ்வுகளும், பிப் 7ல் பேரணியும் நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டிற்காக டிச 15ம் தேதி முதல் சைக்கிள் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications