அர்ச்சகர்களிடம் போலீசார் கெடுபிடி-செல்போன்களை பறித்து சோதனை
நெல்லை: காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் பாலியல் புகாரில் சி்க்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நெல்லையில் அர்ச்சகர்களிடம் போலீசார் கெடுபிடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
கோயில் கருவறையில் பெண்களிடம் பாலியல் உறவு கொண்டதாக கைதான காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனுடன் மேலும் பல அர்ச்சகர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையிலும் போலீசார் அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு தென் மண்டல பூசாரிகள் சங்க தலைவர் கார்த்திகேயன் குருக்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது:
தேவநாதன் தவறு செய்தார் என்பதற்காக ஓட்டு மொத்த அர்ச்சகர்களையும் குற்றவாளியாக போலீசார் நினைப்பது தவறு. நெல்லையில் சோதனை என்ற பெயரில் போலீசார் வாகனங்களில் செல்லும் அர்ச்சகர்களிடம் சோதனை நடத்தி அவர்களை தரக்குறைவாக பேசுகின்றனர்.
மேலும் அவர்களின் செல்போன்களையும் பறித்து தேவநாதன் சம்பந்தப்பட்ட ஆபாச காட்சிகள் இருக்கிறதா என பார்க்கின்றனர். நடுரோட்டில் வைத்து இதுபோன்ற செயல்களில் போலீசார் ஈடுபடுவதால் அர்ச்சர்கள் பெரும் மன கஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே சோதனை என்ற பெயரில் சாலையில் வைத்து செல்போன்களை பறித்து ஆபாச காட்சிகள் இருக்கின்றனவா என பார்ப்பதை தடை செய்ய வேண்டும். மேலும் ஆபாச காட்சிகளை செல்போன்களில் பரப்புவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications