உலகின் செல்வாக்கு மிக்க முஸ்லீம்கள் பட்டியலில் கலாம்-ரஹ்மான்-ஷாருக்

அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் உள்ள முஸ்லிம்கள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு நடத்தி செல்வாக்கு மிக்க 500 பேரின் பட்டியலைத் தயாரித்துள்ளது.
இதில் தமிழர்கத்தைச் சேர்ந்த அப்துல் கலாம், ரஹ்மான் ஆகியோர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல சூஃபி இஸ்லாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அலிகார் பல்கலைக்கழகப் பேராசிபரியர் சையத் அமீன் மியான் காத்ரியும் இந்தப் பட்டியலில் 44 இடத்தைப் பிடித்துள்ளார்.
தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஜமாத் உலமே இ ஹிந்த் அமைப்பின் தலைவரும் எம்பியுமான மெளலானா மெஹ்மூத் மதானியும் இந்தப் பட்டியலில் 36 இடத்தைப் பிடித்துள்ளார்.
தாவூதி போரா பிரிவுத் தலைவரான அஸ்கர் அலி என்ஜினியர், பிரபல இஸ்லாமிய அறிஞரான வகீதுன் கான், ஷகீர் அப்துல் கரீம் நாயக், மிகப் பிரபலமான நியூஸ் வீக் இதழின் ஆசிரியரான பரீத் ஷகாரியா ஆகியோரும் இதில் இடம் பிடித்துள்ளனர்.
இவர்கள் தவிர தவிர அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன், தீவிரவாதப் போக்கை கடைபிடிக்கும் மெளலானா மசூத் அசார், ஹபீஸ் முகமது ஆகியோரும் இந்த செல்வாக்கு மிக்க முஸ்லீம்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications