ஜெ.விடம் மீனவ மக்கள் ஏமாற மாட்டார்கள்-கருணாநிதி
சென்னை: இடைத் தேர்தலில் மீனவர் சமூகத்தினரின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக மீன்பிடி சட்டத்தை எதிர்த்து திடீரென டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
19ம் தேதி திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் இடைத் தேர்தல் நடக்கும் நிலையில் இந்த சட்டத்தை கண்டித்து, 18ம் தேதி டெல்லியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
(இதில் திருச்செந்தூரில் மீனவர் சமூகத்தினரின் வாக்குகள் அதிகளவில் உள்ளன)
இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தச் சட்டத்தை எதிர்த்து ஒரு மாதத்துக்கு முன்பே நான் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிவிட்டேன். இது குறித்து அனைத்து மாநிலங்களுடனும் பேசித் தான் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துவிட்டது.
மேலும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உணவு அமைச்சர் சரத் பவாரை சந்தித்தும் இது குறித்துப் பேசியுள்ளார்.
ஆனால், இந்த விஷயத்தில் இத்தனை நாட்களாக அமைதி காத்து வந்த ஜெயலலிதா இடைத் தேர்தலில் மீனவ சமூக மக்களின் வாக்குகளை மனதில் வைத்துக் கொண்டு திடீரென இப்போது போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.
இதைக் கண்டு மீனவ மக்கள் ஏமாறமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications