உற்பத்தித் துறையில் 11 சதவீத வளர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

Growth
டெல்லி: உற்பத்தித் துறையில் ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது இந்தியா. கடந்த ஆண்டு அக்டோபரில் மைனஸ் 0.6 சதவிகிதமாக இருந்த உற்பத்தித் துறை வளர்ச்சி இந்த ஆண்டு 11.1 சதவீத வளர்ச்சியை சாதித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் மற்றெல்லா நாடுகளையும் விட விரைவான மீட்சியைப் பெற்றுவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறுகையில், இந்த ஆண்டு 10 சதவீத வளர்ச்சி உற்பத்தித் துறையில் சாத்தியமே. இந்த வளர்ச்சி விகிதம் அடுத்த நிதி ஆண்டிலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.

கார்கள், சணல் பொருள்கள் உள்ளிட்ட 17 வகைப் பொருள்கள் உற்பத்தியில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே அக்டோபரில் எதிர்மறையாக இருந்தது உற்பத்தித் துறையின் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+