வார்ட் புயல் 15ம் தேதி காலை தமிழக கரையை கடக்கிறது

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை படிப்படியாக வலுவடைந்து புயல் சின்னமாக மாறியது. வார்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று காலை நிலவரப்படி திரிகோணமலையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலும், நாகையிலிருந்து 360 கிலோமீட்டர் தொலைவிலும், பாம்பனிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
இது தொடர்ந்து மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கையில், நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும்.
பின்னர் இது மன்னார் வளைகுடா மூலமாக தென் தமிழகத்தில் கன்னியாகுமரிக்குநம், பாம்பனுக்கும் இடையே 15ம் தேதி அதிகாலையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில், வடக்கு கடலோர தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யும். சில பகுதிகளில் கன மற்றும் மிக பலத்த மழை பெய்யும்.
தென் கடலோர தமிழகத்தில் பல இடங்களில் கனத்த முதல் மிக பலத்த மழை வரை பெய்யலாம்.
தென் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். சில இடங்களில் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும்.
வடக்கு கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலான சூறாவளிக் காற்று வீசும்.
தென் கடல் பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். ராட்சத அலைகள் எழும். வட கடலோரப் பகுதிகளிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குப் போக வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
சென்னையில் மெரீனாவில் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுவதால் கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications