அரசுத் தரப்பு சாட்சியாக மாறுகிறார் ஹெட்லி - ராணாவுக்கு எதிராக சாட்சியமளிப்பார்

மேலும் எப்.பி.ஐக்கு ஆதராவனவராக மாறி லஷ்கர் இ தொய்பா மற்றும் தஹவூர் ஹூசேன் ராணாவுக்கு எதிராக அவர் சாட்சியமளிப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஹெட்லியை தங்களுக்கு சாதகமாக மாற்றுவது தொடர்பாக எப்.பி.ஐ. சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும், இதுதொடர்பாக ஹெட்லிக்கும், எப்.பி.ஐக்கும் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராணாவுக்கும், லஷ்கருக்கும் எதிராக தற்போது ஹெட்லியை எப்.பி.ஐ திருப்பி விட்டதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் ஹெட்லியை எப்.பி.ஐ. இந்த வழக்கிலிருந்து விடுவிக்காது என்றும் கூறப்படுகிறது. காரணம், அவருக்கு மும்பைத் தாக்குதலில் தொடர்பு இருப்பதால் அவர் விடுவிக்கப்பட மாட்டார் என்று தெரிகிறது.
அதேசமயம், அமெரிக்க அரசுக்கும், எப்.பி.ஐக்கும் ஆதரவாக அவர் மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. அவரை உண்மையான சாட்சியமாக மாற்றி, சாதாரண தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் தெரிகிறது.
ஹெட்லி அமெரிக்காவுக்கு சாதகமாக மாறுவது, இந்திய அரசுக்கு நிச்சயம் கெட்ட செய்தியாக இருக்கும். காரணம், இப்போதே, மும்பைத் தாக்குதல் தொடர்பாக ஹெட்லியை விசாரிக்க இந்தியாவுக்கு அனுமதி மறுத்து வருகிறது எப்.பி.ஐ. அவர் முழுமையான அமெரிக்க தரப்பு சாட்சியமாக மாறி விட்டால், நிச்சயம் இந்தியா அவரை விசாரிக்க அமெரிக்காக அனுமதிக்காது என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications