பிரச்சாரத்தில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட வைகோ - கனிமொழி!

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் பரமன்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கனிமொழி மாநாடு கிராமம் வழியாக திருச்செந்தூர் சென்ற போது, எதிரே வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ - இருவரும் இருவருக்கு ஒருவர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் வருகிற 19 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ கிராமம் கிராமமாக தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.

இது போன்று திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து திமுக, எம்.பி.கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ, அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து திருச்செந்தூர், மணப்பாடு பிரச்சாரம் செய்துவிட்டு பரமன்குறிச்சிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வேனில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக எம்பி கனிமொழி பரமன்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

இதனால் டென்ஷனான போலீசார் , மாநாடுகிராமத்தில் வைகோவின் வேனை நிறுத்தி, கனிமொழி பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதால் 10 நிமிடம் நின்று செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். போலீசாரின் வேண்டுகோளை ஏற்று வைகோ சுமார் 15 நிடம் தனது பிரிச்சாரை பயணத்தை நிறுத்தி வைத்தார்.

இந்த தகவல் அதிமுக-வினர் காதுகளுக்கு எட்ட , அதிமுக-வினர் திரண்டு வந்தனர். பரமன்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கனிமொழி மாநாடு கிராமம் வழியாக திருச்செந்தூர் சென்றார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

அப்பொழுது வை.கோ.வும் கனிமொழி எம்.பியும் நேருக்குநேர் சந்திக்கும் சூழ்நிலை உருவான போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+