திருச்செந்தூர் - அதிமுக தேர்தல் அலுவலகத்துக்குத் தீ வைப்பு
திருச்செந்தூர்: இடைத் தேர்தலையொட்டி திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் போடப்பட்டிருந்த தேர்தல் அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குரும்பூரை அடுத்துள்ள சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் ஒரு கட்டடத்தின் முன்புறம் கூரை செட் போட்டு அதிமுக தேர்தல் அலுவலகம் அமைத்திருந்தனர்.
இந்த அலுவலகத்திற்கு அடுத்த இடத்தில், தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் என்பவரின் டீக்கடை உள்ளது.
நேற்று நள்ளிரவில் தி.மு.க. கிளை செயலாளர் கடையில் பற்றிய தீ மளமளவென பரவி அ.தி.மு.க.,தேர்தல் அலுவலகத்திற்குத் தொற்றியது. இதில், கூரை செட் தீக்கிரையானது.
அப்போது உள்ளே அதிமுக தொண்டர் இசக்கிமுத்து உள்ளிட்ட சிலர் படுத்திருந்தனர். தீ பரவியதும் அவர்கள் வேகமாக வெளியேறி விட்டனர். யாரும் காயமடையவில்லை.
இதுகுறித்து குரும்பூர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவினர்தான் வேண்டும் என்றே தீயை பரவவிட்டுள்ளனர் என்று அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications