தனி விதர்பா மாநிலம் கோரி போராட்டம்-ரயில் சிறைபிடிப்பு
மும்பை: மகாராஷ்டிரத்தைப் பிரித்து தனி விதர்பா மாநிலம் அமைக்கக் கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி விதர்பா பகுதியில் வன்முறைகளும் நடந்து வருகி்ன்றன.
நாக்பூர், அமராவதி பகுதிகளை உள்ளடக்கி தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை இருந்து வருகிறது. இது மகாராஷ்டிரத்தின் மொத்த பரப்பளவில் 31 சதவீத பகுதியாகும். அம் மாநில மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் இங்கு வசிக்கின்றனர்.
1950களில் இந்தியாவின் மத்திய மாகாணத்தின் ஒரு பகுதியாக இப் பகுதி விளங்கியது. பெரும்பாலும் இந்தி பேசும் மக்களைக் கொண்ட இந்தப் பகுதி அப்போதைய பிரதமர் நேருவால் மகாராஷ்டிரத்துடன் இணைக்கப்பட்டது.
இந் நிலையில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தனி விதர்பா மாநில விவகாரம் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவதையடுத்து மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி விதர்பா பகுதியில் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.
நாக்பூர் அருகே இன்று காலை மும்பை-விதர்பா எக்ஸ்பிரஸ் ரயில் வழி மறிக்கப்பட்டது. தண்டவாளத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அமர்ந்து ரயிலை சிறை பிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தனி விதர்பா மாநிலம் கோரி கோஷங்கள் எழுப்பி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
மிகவும் பி்ற்பட்ட பகுதியாக விளங்கும் இங்கு சில ஆண்டுகளுக்கு முன் நிலவிய கடும் வறட்சியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது நினைவுகூறத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications