கோபன்ஹேகன் மாநாட்டில் இந்தியா திடீர் வெளிநடப்பு- பரபரப்பு
கோபன்ஹேகன்: கோபன்ஹேகனில் நடந்து வரும் புவிவெப்ப மாற்ற மாநாட்டில் 'பேசிக்' எனப்படும் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பின்னர் இந்த நாடுகள் மீண்டும் கலந்து கொண்டன.
கியோட்டோ பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2வது உறுதியளிப்பு காலம் குறித்து கோபன்ஹேகன் மாநாட்டில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படாததற்கு அதிருப்தி தெரிவித்து இந்த திடீர் வெளிநடப்பு மேற்கொள்ளப்பட்டது.
கியோட்டோ பிரகடனத்தின் 2வது உறுதியளிப்பு காலத்தில், வளர்ந்த நாடுகள் புகை மாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், வளர்ந்த நாடுகள் இது குறித்து விவாதம் நடத்துவதை தவிர்க்கப் பார்ப்பதால் வளரும் நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தியக் குழுவின் சார்பில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பேசிக் குழுமத்தின் மற்ற தலைவர்கள் எழுந்து சென்று மாநாட்டின் தலைவரும், டென்மார்க் அதிபருமான கோனி ஹெட்கார்டை சந்தித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலியக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், 2வது உறுதியளிப்பு காலத்தின் அம்சங்கள் குறித்து கோபன்ஹேகன் மாநாட்டில் முறையாக விவாதிக்கப்படாதது குறித்து 'பேசிக்' அமைப்பின் அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்றார்.
இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து இதுதொடர்பான விவாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
பின்னர் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக ரமேஷ் உள்ளிட்டோர் ஹெட்கார்டுடன் பேச்சு நடத்தினர். பின்னர் ரமேஷ் உள்ளிட்டோர் வெளியே வந்தபோது பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டதாக ரமேஷ் தெரிவித்தார்.
பிரச்சினை தீர்ந்ததா என்று ஜெய்ராம் ரமேஷிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படித்தான் நினைக்கிறேன். நான் மீண்டும் கூட்ட அரங்குக்கு செல்கிறேன் என்றார்.
இந்த குறுகிய கால வெளிநடப்பால் மாநாட்டில் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications