கட்டண வசூல் சாவடிகளை ஏலம் விடும் நெடுஞ்சாலைத் துறை
டெல்லி: நெடுஞ்சாலைத் துறையில் மேலும் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், அனைத்து கட்டண வசூல் சாவடிகளையும் (டோல் பிளாஸா) தனியாருக்கு ஏலத்தில் விட மத்திய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.
இப்போது இந்த கட்டண வசூல் சாவடிகளை முன்னாள் ராணுவத்தினர் நிர்வகித்து வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிந்துறையின்பேரில் இவ்வாறு செய்யப்பட்டு வந்தது.
இனி வருவாயை அதிகப்படுத்தும் வகையில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட தொகைக்கு கட்டண வசூல் சாவடிகளை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் உள்ள (என்.எச்.-2) ஏழு கட்டண வசூல் சாவடிகளும், என்.எச்.-25ல் ஒரு கட்டண வசூல் சாவடியும் முதல்கட்டமாக இவ்வாறு ஏலம் விடப்படுகிறது.
விரைவில் மேலும் 24 கட்டண வசூல் சாவடிகள் ஏலம் விடுப்படும்.
மொத்தம் 96 கட்டண வசூல் சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளதாகவும், இவற்றின் மூலம் தற்போது ரூ.1,700 கோடி வருவாய் கிடைப்பதாகவும் நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.
இவற்றை ஏலத்தில் விட்டால் மேலும் பல மடங்கு அதிகமான வருவாய் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளதால், இந்த புதிய முடிவு எடுத்துள்ளார்களாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications