தனி தெலுங்கானா மாநிலத்துக்கு ஜெயலலிதா எதிர்ப்பு

திருச்செந்தூரில் இடைத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இன்று தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
தெலுங்கானா விஷயத்தில் மத்திய அரசு அவசரப்படடு தவறான முடிவெடுத்துள்ளது. ஆந்திரம் இரண்டாகப் பிரிவதை அதிமுக ஏற்கவில்லை.
அதே போல எந்த ஒரு மாநிலத்தையும் பிரிப்பதை அதிமுக ஏற்காது. தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று ராமதாஸ் போன்றவர்கள் கோரிக்கை வைப்பது தவறானது என்றார்.
தமிழகத்தை பிரிக்க திருமாவும் எதிர்ப்பு:
இந் நிலையில் தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி சென்னை மெமோரியல் ஹால் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருமாவளவனிடம் அந்திராவில் தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்படுவதை போல தமிழகத்திலும் பிரிவினை கோரிக்கை எழுந்துள்ளது பற்றி நிருபர்கள் கேட்டபோது,
'தனி தெலுங்கானா பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி தமிழக முதல்வர் கூறிய கருத்தையே நான் வழி மொழிகிறேன். இவ்வளவு காலம் முடிவெடுக்க தவறிய மத்திய அரசு, இப்போது எடுத்த அவசர முடிவு சிக்கலை ஏற்படுத்திவிட்டது.
மேலும் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற சிலரது கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கவில்லை. தமிழ்நாட்டை பிரிக்க கூடாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications