திருச்செந்தூர் திமுக, அதிமுக பலப்பரீட்சை- நீயா, நானா போட்டி

தமிழகத்தின் புகழ் பெற்ற தொகுதிகளில் திருச்செந்தூரும் ஒன்று. முருக கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான இவ்வூர் மிகவும் பிரசித்த பெற்ற பகுதி.
இத்தொகுதியில் கடந்த சில தேர்தல்களில் தொடர்ந்து அதிமுகவே வெற்றி பெற்று வந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏராளமான தொகுதிகளை அதிமுக இழந்தபோது தூத்துக்குடி மாவட்டம் அதி்முக கோட்டை என்று பாறைசாட்டும் விதமாக 4 தொகுதிகளை கைப்பற்றியது. அதில் திருச்செந்தூரும் ஓன்று.
கடந்த சில மாதங்களுக்கு முன் இத்தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக அனிதா ராதாகிருஷ்ணன், அக்கட்சியில் இருந்து விலகி தனது எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்து திமுகவில் இணைந்ததால் இப்போது இத்தொகுதிக்கு மீண்டும் தேர்தல் வந்துள்ளது.
இங்கு அதிமுக சார்பில் அம்மன் டி நாராயணன், தி்முக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன், தேமுதிக சார்பில் கோமதி கணேசன் போட்டியிடுகின்றனர். மும்முனை போட்டி ஏற்பட்டாலும் 20க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் களத்தில் உள்ளனர்.
திருச்செந்தூர் தொகுதியை பொறுத்தவரை அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஏராளமான வளர்ச்சி பணிகளை தொடர்ந்து செய்து வந்ததால் மக்களிடம் இவர் மீது அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் மக்களுக்காக தனது சொந்த பணத்தை செலவு செய்யும் மனநிலை உள்ளவர் என்றும், தொகுதியின் பல பகுதிகளில் வாக்காளர்களால் பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது அதிமுக பிரமுகர்கள் பலரும் அனிதாவோடு நல்ல உறவு வைத்துள்ளனராம்.
தி்முகவில் இணைந்தது முதல் தேர்தல் அறிவிக்கும் முன்னரே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு வெற்றி காய்களை நகர்த்தி வருகிறார் அனிதா. தொகுதியில் 'காந்தி தாத்தா'வின் புழக்கம் அமோகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயம் திமுகவினர் மாவட்ட செயலாளர் கண்ணசைவுபடிதான் தேர்தல் பணியாற்றுகின்றனர். அதிமுக வேட்பாளர் அம்மன் டி நாராயணனும் அனிதாவுக்கு சளைத்தவராக இல்லை.
அனிதா கடந்த தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்காக பம்பரமாக சுழன்று நெளிவு, சுளிவு அறிந்து வெற்றிக்கு வெகுவாக பாடுபட்டவரும் கூட. கட்சிக்காரர்கள் மற்றும் பொது மக்களிடம் நல்ல பெயரே உள்ளது. போதிய அளவு காரன்சி இல்லாததது மட்டுமே இவரது குறை. மேலும் புதுமுக வேட்பாளரும் கூட.
தேமுதிக வேட்பாளர் கோமதி கணேசன் இரண்டாவது முறையாக களம் காணுகிறார். கடந்த தேர்தலில் போட்டியிட்டு சுமார் 5 ஆயிரம் வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்த இவர் இம்முறை வெற்றி பெற வேண்டும் என்று தேமுதிகவினர் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதி்முக வேட்பாளருக்கு ஆதரவாக செங்கோட்டையன் தலைமையில் ஓ.பி, பிஎச் பாண்டியன், முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்ட பொறுப்பாளர்கள் வந்து முகாமிட்டு தேர்தல் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் ஜெயலலிதா, முக ஸ்டாலின், ஜிகே வாசன், தங்கபாலு, வரதராஜன், வைகோ, கனிமொழி, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரமும் நடந்து முடிந்து விட்டதால் கடைசி கட்ட தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் 3 கட்சி வேட்பாளர்களும் உள்ளனர்.
அள்ளித் தர்றோம்...எடுத்துக்கோ...!!
தொகுதி முழுவதும் வாக்களர்களுக்கு இஷ்டம் போல் வாரி வழங்கப்படுகிறது. கரன்ஸி மழைக்குப் பஞ்சமே இல்லை என்கிறார்கள்.
பெருமளவில் பணத்தை வாரி இறைத்து வரும் நிலையிலும், இங்கு பெரும்பான்மை நாடார், மீனவ சமுக மக்களின் வாக்கு வங்கிதான் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது.
தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுகவோடு நல்ல உறவில் உள்ளதும், மந்திரி சபையில் அங்கம வகிப்பதும் குறிப்பிடத்தக்க விசயம். ஆனால் இந்த தொகுதி இடைத் தேர்தல் சமயத்தில் மத்திய அரசு மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தினை கொண்டு வர உள்ளது. அதற்கு மீனவர்கள் மத்தியில் எதிர்பபு அதிகரித்துள்ளது.
இதனை அதிமுக பொது செயலாளர் கண்டித்து அறிக்கை வெளியிட்டு டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அறிவிப்பு செய்துள்ளார். இதனை அறிந்த முதல்வர் மீனவர் ஓட்டு மிஸ்ஸாகி விடக் கூடாது என இச்சட்டத்தை ஓத்தி வைக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளார்.
ஆனால் தேர்தலுக்குப் பின்னர் இந்த சட்டம் வரும் என்று அதிமுக தரப்பில் பிரசாரம் செய்யப்படுவதால், இப்பிரச்சனையும் தொகுதிக்குள் மீனவ மக்களிடம் திமுகவுக்கு மைனசை உருவாக்க வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை-திருச்செந்தூர் சிறப்பு ரயிலை இயக்காமல் காலம் தாழ்த்து வரும் ரயில்வேயின் மெத்தன போக்கு, தமிழகத்தில் கள் இறக்க அனுமதியில்லாதது, போன்ற பிரச்சனைகளும் திமுகவை அசைத்து பார்க்க தொடங்கியுள்ளது.
மேலும் கடந்த சில தினங்களாக திருசெந்தூர் தொகுதியில் நடந்து வரும் மோதல், கார் உடைப்பு, தேர்தல் பந்தலுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்களும் அதிமுகவினர் தங்கியிருந்த விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தியதும் திமுகவினருக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் இதையெல்லாம் உரிய முறையில் சரிக்கட்டி விடலாம் என திமுகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
திருச்செந்தூர் தொகுதியை பொறுத்தவரை அனிதாவுக்கு மக்கள் மத்தியில் இருந்த நற்பெயர் இத்தேர்தல் மூலம் சற்று சரிய தொடங்கியுள்ளது. மும்முனை போட்டி என்று கருதப்பட்டாலும் உண்மையான போட்டி என்னவோ அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் ஏற்பட்டுள்ளது.
இடைத் தேர்தலில் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று திமுகவினர் கூறுவது நெருடலாகதான் இருக்கிறது. தொகுதியில் நிலவி வரும் கடும் போட்டியால் அதி்முக-திமுக சமமான நிலையில்தான் உள்ளது.
இடைத் தேர்தல் யாருக்கு நன்மையோ, இல்லையோ தொகுதி மக்களுக்கும், வாகன அதிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நன்மையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது என்ன நன்மை என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தல் நிலவரம்
மொத்த ஓட்டு - 1,66,975
பதிவானவை - 1,11,580
அனிதா ராதாகிருஷ்ணன் (அதிமுக) - 58,600
ஜெயசீலன் (திமுக) - 44,684
கணேசன் (தேமுதிக) - 3,756
போட்டியிட்ட வேட்பாளர்கள் - 14 பேர்
மொத்த பூத் எண்ணிக்கை - 194.
திருச்செந்தூர் வாக்காளர்கள் 1983ம் ஆண்டு அதிமுகவுக்கு அமோக வெற்றியைத் தந்தது போல இந்தமுறையும் தந்து திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா கோரி வருகிறார். திருப்புமுனையைத் தருமா திருச்செந்தூர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
அரசு வேலை.. தாமதம் இருக்காது.. உடனே 1.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.. திமுக தேர்தல் அறிக்கை












Click it and Unblock the Notifications