புயல் மேலும் வலுவிழந்தது: திரிகோணமலையை நெருங்கியது- நாளை தமிழகத்தில் கரை கடக்கும்

வார்ட் புயல் நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள புயல் எச்சரிக்கைச் செய்தி...
தென் மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வந்த வார்டு புயல் இன்று பிற்பகல் இலங்கையின் திரிகோணமலை நெருங்கி விட்டது. இன்னும் சில மணி நேரங்களில் அது கரையைக் கடக்கும்.
பின்னர் அது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து, மன்னார் வளைகுடாவுக்குள் பிரவேசிக்கும். பின்னர் நாளை பிற்பகல் வாக்கில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே அது கரையைக் கடக்கும்.
இருப்பினும் தற்போது புயல் மேலும் வலுவிழந்துள்ளது. இது மேலும் வலுவிழக்க வாய்ப்புகள் உள்ளன.
புயல் காரணமாக, தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகள், புதுச்சேரியில், அடுத்த 36 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் கன மழை பெய்யும். சில இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புண்டு.
அடுத்த 24 மணி நேரத்தில் தெற்குக் கடலோர மாவட்டங்களில் கடலில் மணிக்கு 55 கிலோமீட்டர் முதல் 75 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் புயல் காற்று வீசும்.
அதேபோல வடக்கு கடலோர மாவட்டங்களில் கடலில் மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும்.
கடல் கொந்தளிப்பாக காணப்படும். அலைகள் பெரிதாக எழும். எனவே மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications