ஆர்குட் மூலம் பெண்களை குறி வைக்கும் கும்பல்-ஐ.ஜி
கோவை: 'ஆர்குட்' போன்ற வளைதளங்கள் மூலம் குடும்பப் பெண்கள் ஏமாற்றப்படுவதாக சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் பிரிவு ஐ.ஜி பிரதாப்ரெட்டி எச்சரித்துள்ளார்.
மேற்கு மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கு 'சைபர் சேஃப் தமிழ்நாடு-09' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இதில் சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் பிரிவு ஐ.ஜி பிரதாப்ரெட்டி பேசியதாவது:
இன்டர்நெட், எஸ்.எம்.எஸ் மூலம் 95 சதவீதம் பேர் ஏமாற்றப்படுகின்றனர். பெரும்பாலும் பல்வகை திறமை இருப்பவர்கள் தான் மற்றவர்களை ஏமாற்றுகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் மற்றும் குடும்பப் பெண்கள் தான், ஆர்குட் மூலம் ஏமாறுகின்றனர். தேவையில்லாமல் போட்டோக்களை இணைத்து ஏமாந்து போகின்றனர்.
ஆன்லைன் மூலம் கம்பெனிகளின் டேட்டாக்களை திருடி பயன்படுத்துவதும், அதை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதும் தற்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆன்லைன் வியாபாரத்தில், வியாபாரிகள் கூட ஏமாற்றப்படுகின்றனர். ஆன் லைன் லாட்டரிகளில், லட்சங்களை இழப்பவர்கள் அதிகமாக உள்ளனர்.
இ-மெயில் மற்றும் கிரெடிட் கார்டு மோசடிகள், இன்று சர்வசாதராணமாக நடக்கின்றன. இதனால் தான் சைபர் கிரைம் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, சைபர் கிரைம் வழக்குகளை கையாளுதல், விசாரித்தல், குற்றவாளிகளை கண்டுபிடித்தல் பணிகளில் போலீஸ் அதிகாரிகள், போதுமான பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் குற்றவாளிகளை எளிதாக பிடிக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications