ராணா தப்ப வாய்ப்பு-அமெரிக்க கோர்ட் ஜாமீன் மறுப்பு

இதுதொடர்பான உத்தரவைப் பிறப்பித்த சிகோகா கோர்ட் நீதிபதி நான் நோலன், ராணா ஒரு கனடிய குடிமகன். அமெரிக்காவுக்கு வெளியே பலமுறை சென்று வந்துள்ளார். அவருக்கு வெளிநாடுளில் ஏராளமான நிதியாதாரங்கள் உள்ளன. குடியுரிமை சேவைகளிலும் அவர் தொடர்பு கொண்டுள்ளார்.
எனவே ராணாவை விடுவித்தால் அவர் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி வெளியேறி விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், அவரது தந்தை, உறவினர்கள் கனடாவில்தான் உள்ளனர். அமெரிக்காவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்புகள் இல்லை. எனவே அமெரிக்காவில் அவர் நிச்சயம் தங்கியிருப்பார் என்று உறுதியாக கூற முடியாது.
ராணாவுக்கு சிகோகோவில் ஒரு குடியுரிமை சேவை அலுவலகமும், பலசரக்கு நிறுவனமும் மட்டுமே உள்ளன. அதேசமயம், அவர் துபாய், சீனா, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு நிறைய தொடர்புகள் உள்ளன.
ராணாவுக்கு கிட்டத்தட்ட 1.6 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி ஆதாரங்கள் உள்ளன. இதைப் பயன்படுத்தி அவர் அமெரிக்காவிலிருந்து தப்பி ஓடி விட முடியும்.
இந்தக் காரணங்களால் ராணாவுக்கு ஜாமீன் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி ஜாமீன் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் ஹெட்லியுடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர் ராணா. ஜாமீன் வழங்கக் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணையின்போதுதான் நீதிபதி இவ்வாறு கூறினார். விசாரணைக்கு ராணாவும் ஆஜராகியிருந்தார்.












Click it and Unblock the Notifications