karnataka lorry owners association, transport, inter state, strike, கர்நாடகா, லாரி உரிமையாளர்கள் சங்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இன்றைய பேச்சுவார்த்தையில் அரசு எங்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் கர்நாடகத்துக்குள் நுழையும் அனைத்து மாநில லாரிகளையும் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடத்துவோம் என கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

கர்நாடகத்தில் மணல் எடுக்க மணல் குவாரிகளுக்கும், லாரிகளுக்கும் முறையான அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் கடந்த 7ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர லாரி உரிமையாளர்களுடன் கர்நாடக அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இன்றும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், கர்நாடக மாநிலத்துக்குள் வரும் அனைத்து லாரிகளையும் தடுத்து நிறுத்துவோம் என லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக லாரி உரிமையாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் சங்க கூட்டமைப்பு தலைவருமான சண்முகப்பா கூறுகையில், கர்நாடக அமைச்சர் அசோக் இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

சில கோரிக்கைகளை அமைச்சர் ஏற்கனவே ஏற்றுக் கொண்டு உள்ளார். இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலும் அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம்.

ஒருவேளை கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்தால், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில், அனைத்து மாநிலங்களில் இருந்தும் கர்நாடகத்துக்கு வரும் லாரிகளை தடுத்து நிறுத்துவது குறித்து முடிவு எடுப்போம். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+